32.2 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

வெளியான 24 மணி நேரத்தில் 2.2 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்த ”கங்குவா” க்ளிம்ப்ஸ்…

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ”கங்குவா” திரைப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தனது 48 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதற்காக அவர் தற்போது நடித்து வரும் ‘கங்குவா’ படத்தின் முன்னோட்ட வீடியோவை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டனர். இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் ஸ்பெஷல் போஸ்டருடன் வெளியிட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட ரிலீசாக வெளியாக இருப்பது ‘கங்குவா’ படம். சூர்யா நடிப்பில் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்தப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். தொடர்ச்சியாக பேமிலி டிராமா படங்களை இயக்கி கமர்ஷியல்ரீதியாக தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த இயக்குநர் சிவா, தற்போது முதன்முறையாக சூர்யாவுடன் கூட்டணி அமைத்துள்ள ‘கங்குவா’ படத்தினை தனது பாணியிலிருந்து முற்றிலும் வேறு விதமாக இயக்கி வருகிறார்.

3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கங்குவா’ படம் 10 மொழிகளில் தயாராகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இரு மடங்கு பட்ஜெட்டில் இந்தப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். அத்துடன் இந்தப்படத்தில் பல கெட்டப்களில் நடிக்கும் சூர்யா, இதற்காக உடல் எடையை அதிகரித்து மாஸ் லுக்கில் வலம் வருகிறார்.

இந்நிலையில் ‘கங்குவா’ படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை நள்ளிரவு 12.01 மணிக்கு ‘கங்குவா’ படத்தின் ”ஆழிக்குள் கொடிநட்ட மாறாக்கன் வழி வந்து… வேழத்தை விழ வச்ச கொச்சாமி வழிவந்து..” எனத்தொடங்கும் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இந்த  வீடியோ வெளியாகிய 24 மணி நேரத்தில் 2.2 கோடி பார்வைகளை கடந்து தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் அந்த கிளிம்ப்ஸ் வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading