ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவன் வரைந்த மைக்கேல் ஜாக்சன் ஓவியம் வைரலாகி வருகிறது.
பலரும் தங்களது உணர்வுகளை கலையின் மூலம் வெளிப்படுத்துகின்றனர். சிலர் தங்களுடைய கற்பனைகளுக்கு உயிர்ப்பூட்டி வண்ணமும், வடிவமும் கொடுத்து காகிதத்தில் ஓவியமாக வரைகின்றனர். அந்த வகையில், ஆட்டிசம் பாதித்த சிறுவன் ஒருவன் வரைந்த மைக்கேல் ஜாக்சன் ஓவியம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விக்டர் பெவாண்டா எனும் 14 வயது சிறுவன் ஓவியம் வரைவதில் ஆர்வம் மிக்கவர். ஆட்டிசம் பாதித்த இச்சிறுவன் தெளிவான கலைப் படைப்புகளை தொடர்பு கொள்வதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்துகிறார். இயற்கைக் காட்சிகளையும், உருவப் படங்களையும் வரைவதற்கு போல்ட் ஆன வண்ணங்களைப் பயன்படுத்துகிறார்.
https://www.instagram.com/reel/Coe-yaXDTWF/?igshid=YmMyMTA2M2Y=
சமீபத்தில் இவரது ஓவியம் ஒன்றின் வீடியோவை பிரபல இசைக் கலைஞர் வில்லி கோம்ஸ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதில், மைக்கேல் ஜாக்சன் உருவத்தை மிக நேர்த்தியாகவும், அழகாகவும் உருவாக்குகிறார் விக்டர் பெவாண்டா. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
பிப்ரவரி 10ஆம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோவை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மேலும், பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆட்டிசம் பாதித்த இச்சிறுவனின் கைவண்ணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
-ம.பவித்ரா








