அசாமில் ஒரே நேரத்தில் 11 ஆயிரத்து 304 நாட்டுப்புறக் கலைஞர்கள் பிஜூ நடனமாடி உலக கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
அசாமின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக கருதப்படும் பிஜூ நடனம், ஏப்ரல் மாதத்தில் வரும் புத்தாண்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கவுகாத்தியில் உள்ள சருசஜாய் ஸ்டேடியத்தில் நாட்டுப்புறக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுகூடி பிஜூ நடனமாடி கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 11 ஆயிரத்து 304 பேர் பிஜூ நடனமாடி அசத்தினர். அவர்களுடன் 2 ஆயிரத்து 548 டிரம்ஸ் கலைஞர்கள் இசை நிகழ்ச்சியை நடத்தினர்.







