மதுரை அருகே நடந்த வாகனவிபத்தில் குத்துச்சண்டை வீரர் உயிரிழந்தார்.
மதுரை- மேலூர் அருகே கத்தப்பட்டி நான்கு வழிச்சாலையில் மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் திடீரென கட்டுபாட்டை இழந்து சென்டர் மீடியனை விட்டு வெளியேறி எதிர்திசையில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மீது மோதியதில் கார் தூக்கி வீசப்பட்டது.
இதில் கார் ஓட்டி வந்த மதுரையை சேர்ந்த குத்துசண்டை வீரர் சதீஸ் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவருடன் பயணித்த முத்துகணேஷ் என்பவர் படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலூர் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







