பியாஜியோ நிறுவனம் தனது எப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்தாலியை சேர்ந்த பியாஜியோ குழுமத்தின் கீழ் செயல்படும் வெஸ்பா மற்றும் எப்ரிலியா ஸ்கூட்டர் நிறுவனம் இந்தியாவில் பிரிமீயம் ரக ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. வெஸ்பா ஸ்கூட்டர்களுக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. இந்தியாவில் தனது மார்க்கெட்டை பெரிது படுத்தும் நோக்கில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட புதிய மாடல் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பியாஜியோவின் எப்ரிலியா நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனது புதிய வடைவமைப்பான எப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Piaggio Aprilia SXR 160 இன் சிறப்பம்சங்கள்;
ஏப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர் 160 இல் சிங்கிள் சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், ஏர்-கூல்ட், 3 வால்வு பியூயல் இன்ஜெக்க்ஷன் கிளீன் எம்மிஷன் என்ஜின் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 7100 ஆர்.பி.எம்மில் 11 பி.எஸ்ஸின் உச்ச சக்தியை வெளிப்படுத்துகின்றது. சிறந்த சவாரி அனுபவத்தையும், உயர்ந்த அளவிலான சௌகரியத்தை வழங்க, ஏப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர் 160 பெரிய, நீண்ட, வசதியான இருக்கைகளை கொண்டுள்ளது. மேலும் 7 லிட்டர் அளவு திறன் கொண்ட எரிபொருள் டேங்கையும் ஏப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர் 160 கொண்டுள்ளது.

விலை நிலவரம்;
Piaggio Aprilia SXR 160 1,25,997 ரூபாய்க்கு (எக்ஸ் ஷோரூம் விலை) கிடைக்கிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பியாஜியோ டீலர்ஷிப்களிலும் இதற்கான முன்பதிவு செய்யலாம்.







