மம்மூட்டி – ஜோதிகா நடித்த ‘காதல் – தி கோர்’ திரைப்படம் எப்போது வெளியாகும்? – லேட்டஸ்ட் அப்டேட்!

மம்மூட்டி ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘காதல் – தி கோர்’ படம் நவம்பர் 23 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 54-வது கோவா சர்வதேச இந்தியத் திரைப்பட விழா இம்மாதம் மாதம் 20…

மம்மூட்டி ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘காதல் – தி கோர்’ படம் நவம்பர் 23 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

54-வது கோவா சர்வதேச இந்தியத் திரைப்பட விழா இம்மாதம் மாதம் 20 ஆம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது.  இந்தியன் பனோரமா பிரிவில் 26 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன.  மேலும் 21 குறும்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில்,  மலையாளத்தில் மம்மூட்டி ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘காதல் – தி கோர்’ படம் கோவா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இந்தப் படத்தை ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கியுள்ளார்.
இப்படம் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் ஜோதிகா.  மேலும் முன்னணி நட்சத்திரமான மம்மூட்டியுடன் முதல் முறையாக நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவுற்றதை அடுத்து இப்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  நவம்பர் 23 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.