சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படத்தின் டீசர் வரும் 6-ம் தேதி வெளியாகும் என அவர் அறிவிக்கப்பட்டுள்ளது.
4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்ஷன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சயின்ஸ் பிக்ஷன் காமெடி ஜானரில் உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் எப்பொழுது திரைக்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.
சமீபத்தில் இப்படத்தின் ஒரு சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் டீசரை படக்குழு தயார் செய்து வருவதாகவும் விரைவில் அதை வெளியிடுவார்கள் என்றும் தகவல் வெளியானது. பின்னர் அயலான் படத்தின் பணிகள் இன்னும் முடியவில்லை என்பதால் 2024 பொங்கல் வெளியீடாக இப்படம் மீண்டும் தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியானது.
https://twitter.com/Siva_Kartikeyan/status/1705530537052635434
சிவகாா்த்திகேயனின் மாவீரன் வெற்றிக்குப் பிறகு இந்தப் படம் வெளியாவதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்புள்ளது. மேலும் அயலான் திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வரும் 6-ம் தேதி வெளியாகும் என அவர் அறிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/Siva_Kartikeyan/status/1708721884295229942







