‘சுழல் 2’ வெப் தொடரின் ரிலீஸ் எப்போது?

கதிர் , ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘சுழல் 2’ வெப் தொடர் வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது

‘விக்ரம் வேதா’ படத்தின் இயக்குநர்களான புஷ்கர்- காயத்ரி எழுதி, தயாரித்திருந்த வெப் தொடர் ‘சுழல்’ . க்ரைம் த்ரில்லர் ஜானரில் பிரம்மா மற்றும் அருண்சரண் இருவரும் இணைந்து உருவாக்கிய இத்தொடரில் கதிர் , ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதிதா சதீஷ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சாம் சிஎஸ் இத்தொடருக்கு இசையமைத்திருந்தார்.

இத்தொடர் கடந்த 2022 ஆம் ஆண்டு  30-க்கும் மேற்பட்ட மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இத்தொடரின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு கடந்தாண்டு ஜூன் மாதத்தில் வெளியானது.

 

இந்த நிலையில்  ‘சுழல் 2’ வெப் தொடரின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக புஷ்கர் – காயத்ரி  வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளனர். அதில் இத்தொடர் வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி  அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.