இயக்குநர் அவதாரம் எடுக்கும் விஜே சித்து! – புதிய படத்திற்கான அறிவிப்பு வீடியோ வெளியானது!

விஜே சித்து இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

தனியார் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் விஜே சித்து. அதன்பிறகு தனியார் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார். தொடர்ந்து அவர் சொந்தமாக தனக்கென யூடியூப் சேனல் தொடங்கி, பார்வையாளர்களை கவந்தார். இதன் மூலம் அவர் திரைப்படங்களை அவ்வப்போது புரமோஷன் செய்து வந்தார்.

அதன் தொடர்ச்சியாக அவர், அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற டிராகன் திரைப்படத்தில் துணை நடிகராக நடித்திருந்தார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

இந்த நிலையில் விஜே சித்து இயக்கி நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் பகிர்ந்துள்ள இந்த அறிவிப்பு வீடியோவில், விஜே சித்து இயக்கும் திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுனவம் தயாரிப்பதாகவும், படத்திற்கு ‘டயங்கரம்’ என்று பெயரிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் தற்போது விஜே சித்து இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.