“இது பயங்கரமா இருக்கு டா” -தலைவர் 171 பட கதையை கேட்டபின் லோகேஷை பாராட்டிய விஜய்!…

இது பயங்கரமா இருக்கு டா என ரஜினியின் தலைவர் 171 பட கதையை கேட்ட விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் தெரிவித்துள்ளார்.        லோகேஷ் – விஜய் கூட்டணி என்பதால் கூடுதல்…

இது பயங்கரமா இருக்கு டா என ரஜினியின் தலைவர் 171 பட கதையை கேட்ட விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் தெரிவித்துள்ளார்.       

லோகேஷ் – விஜய் கூட்டணி என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பும் இப்படத்தின் மீது இருக்கும் நிலையில், லியோ படத்தை முடித்த கையோடு லோகேஷ் இயக்கவிருக்கும் திரைப்படம் தலைவர் 171.

சன் பிச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பும் சமீபத்தில் தான் வெளிவந்தது. மாஸ்டர், விக்ரம், லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் இயக்கும் இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

இந்நிலையில்,  தலைவர் 171 படத்தின் கதையை தளபதி விஜய்யிடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.  அதற்கு விஜய் ’10 நிமிடத்தில் எனக்கு இப்படியொரு கதையை பிடித்துபோனதே இல்லை,  சூப்பர்’  இது பயங்கரமா இருக்கு டா” என லோகேஷ் இடம் கூறியிருக்கிறார் விஜய்.  இதை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தற்போது படுவைரலாகி வருகிறது.

இதே போல்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் , ”ரஜினிகாந்திடம் கதை சொல்ல சற்று பயமாக இருந்தபோது, எனக்கு நம்பிக்கை அளித்தது நடிகர் விஜய்,” என ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.