வைகை, பல்லவன் ரயில்கள் பகுதியாக ரத்து -தெற்கு ரயில்வே!…

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் வரும் அக்.10- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வைகை மற்றும் பல்லவன் ரயில்கள் தாம்பரம்- சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்துச் செய்யப்படுவதாக தெற்கு…

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் வரும் அக்.10- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வைகை மற்றும் பல்லவன் ரயில்கள் தாம்பரம்- சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்துச் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் – தாம்பரம் இடையே வரும் 10-ம் தேதி வைகை மற்றும் பல்லவன் ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் சென்னை எழும்பூர் ரெயில்நிலையத்தில் இருந்து தொடங்கி தாம்பரம் வழியாக செல்கின்றன. இந்நிலையில் எழும்பூர் ரெயில்நிலையத்தில் இருந்து தாம்பரம் வரை வைகை மற்றும் பல்லவன் ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் அறிவித்து உள்ளது.

சென்னை பரங்கிமலை ரெயில்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வைகை எக்ஸ்பிரஸ் தாம்பரம் – மதுரை மற்றும் மறுமார்க்கமாக மதுரை தாம்பரம் இடையே இயக்கப்படும். – மேலும் பல்லவன் எக்ஸ்பிரஸ் காரைக்குடி-தாம்பரம் மற்றும் மறுமார்க்கமாக தாம்பரம்-காரைக்குடி இடையே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.