பாதிக்கும் மேற்பட்ட ட்விட்டர் பயனர்கள் தங்கள் ப்ளூ டிக் சந்தாவை ரத்து செய்துள்ளனர். ட்விட்டரில் ஆரம்பத்தில் 1,50,000 ப்ளூ டிக் சந்தாதாரர்கள் இருந்தனர், ஆனால் இப்போது 68, 157 ப்ளூ டிக் சந்தாதாரர்கள் மட்டுமே உள்ளனர்.
உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினர். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் ப்ளு டிக், ஆட்குறைப்பு, என்று பல்வேறு அதிரடிகளை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது பயனர்களின் பழைய ப்ளூ டிக்-க்குகளை நீக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ட்விட்டர் பயனாளர்களின் வெரிஃபைடு கணக்குகளுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக்கை தொடர்ந்து பெற இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியிருந்த எலான் மஸ்க், கட்டணம் செலுத்தாத பயனர்களின் அந்த ப்ளூ டிக் குறியீடு அகற்றப்படும் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில் அறிக்கையின்படி, பாதிக்கும் மேற்பட்ட ட்விட்டர் சந்தாதாரர்கள் தங்கள் சந்தாவை ரத்து செய்துள்ளனர். ட்விட்டரில் ஆரம்பத்தில் 1,50,000 ப்ளூ டிக் சந்தாதாரர்கள் இருந்தனர், ஆனால் இப்போது ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 68, 157 ப்ளூ டிக் சந்தாதாரர்கள் மட்டுமே உள்ளனர். அதாவது 80,000க்கும் அதிகமான பயனர்கள் தங்கள் சந்தாவை ரத்து செய்துள்ளனர்.
ட்விட்டர் ப்ளூ டிக் பெற $8 அல்லது $11 என்ற கட்டனத்தை நியாயப்படுத்த இந்த சேவை அதன் சந்தாதாரர்களுக்கு போதுமான மதிப்பை வழங்கவில்லை. இது பயனர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியிருக்கலாம் என காரணமாக கூறப்படுகிறது.
ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் போராடி வருகிறது. ட்விட்டர் ப்ளூ டிக்கை பயனர்களுக்கு வெற்றிகரமான சந்தா சேவையாக மாற்ற விரும்பினால், ட்விட்டர் பல அடிப்படை சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என் இணையவாசிகள் தெரிவித்துள்ளனர்.








