2025 குடியரசு தினத்தை முன்னிட்டு 139 பேருக்கு பத்மபூஷன், பத்மவிபூஷன் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இவர்களில் முதற்கட்டமாக நடிகர் அஜித்குமார், கிரிக்கெட் வீரர் அஷ்வின் உள்ளிட்ட 71 பேருக்கு கடந்த மாதம் முதற்கட்டமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் எஞ்சியுள்ள 68 விருத்தாளர்களுக்கு இன்று மாலை இரண்டாம் கட்டமாக விருதுகள் வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்வில் பத்மபூஷன், பத்மவிபூஷன் மற்றும் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கி கௌரவிக்கிறார்.
குறிப்பாக நடிகையும், நடன கலைஞருமான ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர் உள்ளிட்டோர் இன்று விருதுகளை பெறுகின்றனர்.







