சென்னையை உலுக்கிய ஈசிஆர் சம்பவம்… இளைஞர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு!

ஈசிஆர் சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் இளைஞர்களை தேடி வருகின்றனர்.

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இச்சம்பவம் தெர்டர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. மேலும், பெண்கள் பயணித்த காரை இளைஞர்கள் சுற்றுவளைத்து தகராறில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள் : தவெக துணை பொதுச்செயலாளர் ஆகிறாரா ஆதவ் அர்ஜுனா?

அரசியல் கட்சித் தலைவர்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.  இதற்கிடையே, பெண்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காரில் பெண்களை துரத்தி சென்ற இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் சென்ற கார் இளைஞர்களின் காரை உரசி சென்றதாகவும், காரை நிறுத்தி நியாயம் கேட்கவே இளைஞர்கள் காரை துரத்தியதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், மேலும் 1 தனிப்படை அமைத்து இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.