”உங்கள் அன்பிற்கு நன்றி” – ஜெயிலர் பட வெற்றி குறித்து சிவராஜ் குமார் நெகிழ்ச்சி!

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ் குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம்…

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ் குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நேற்று முன்தினம்  உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தை பொறுத்தவரை 900 மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.  உலகம் முழுவதும் 4000 திற்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த “படையப்பா” திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று இன்று வரை பேசப்படுகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு ஷிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது.

இவர் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், வரும் சில காட்சிகளில் மாஸ் காட்டியதாக ரசிகர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த பாராட்டுக்கெல்லாம் நன்றி தெரிவிக்கும் விதமாக விடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் சிவராஜ் குமார். தான் வெளியிட்ட விடியோவில், “ஜெயிலர் நன்றாக ஓடிக்கொண்டுள்ளது. ரசிகர்களுக்கு மிக்க நன்றி. வாய்ப்பளித்த நெல்சன், ரஜினிக்கும் நன்றிகள். உங்களின் அன்பினை எப்போதும் நெஞ்சில் வைத்திருப்பேன்” என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.