‘ஸ்குவிட் கேம் 3’ டீசர் வெளியீடு!

‘ஸ்க்விட் கேம் 3’ டீசர் வெளியாகியுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ‘ஸ்குவிட் கேம்’. கொரிய மொழியில் தயாரிக்கப்பட்ட இந்த தொடர் உலகளாவிய வெற்றியைத் தொடர்ந்து பல சர்வதேச மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது.

முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. ஆனால் முதல் சீசனோடு ஒப்பிடுகையில் இது அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இதனைத்தொடர்ந்து தற்போது 3வது சீசன் வெளியாக உள்ளது. Squid Game 3 ஜூன் மாதம் 27ஆம் தேதி நெட்பிளிக்ஸ்-ல் வெளியாகிறது.

இந்நிலையில் இன்று ஸ்குவிட் கேம் சீசன் 3-ன் டீசர் வெளியாகி உள்ளது. இதில், இது இந்த தொடரின் கடைசி சாப்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.