தென்மாவட்ட வெள்ள பாதிப்புகள் | கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

வெள்ள பாதிப்பு குறித்த கணக்கெடுப்புகள் முடிந்ததும் , கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது  X தளத்தில் பதிவிட்டுள்ளார்.   தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4…

வெள்ள பாதிப்பு குறித்த கணக்கெடுப்புகள் முடிந்ததும் , கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது  X தளத்தில் பதிவிட்டுள்ளார்.  

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.   தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன.

இந்த நிலையில்,  நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர், ஆடு மாடு போன்ற கால்நடைகள் மற்றும் வீடுகளை இழந்தோருக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, வெள்ள பாதிப்பு குறித்த கணக்கெடுப்புகள் முடிந்ததும் , கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும் எனஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது  X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அதில்,  “கன மழையாலும் – பெருவெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பெருங்குளம், மங்களக்குறிச்சி பகுதி மக்களை இன்று நேரில் சந்தித்து உரையாடினோம்; அப்போது, வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள், கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்; வெள்ள பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணிகள் முழுதாக நிறைவுற்றதும், அவர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதியளித்தோம்” – என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது  X தளத்தில் பதிவிட்டுள்ளர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.