முகேஷ் அம்பானி மகனின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் பாட ரிஹானாவிற்கு இத்தனை கோடியா?

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் பாட அமெரிக்காவில் இருந்து வந்துள்ள ரிஹானாவுக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.    ரிலையன்ஸ் குழும தலைவர்…

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் பாட அமெரிக்காவில் இருந்து வந்துள்ள ரிஹானாவுக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் ஜூலை 12-ம் தேதி  நடைபெற உள்ளது.  அதற்கு முன்னதாக ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி இன்று முதல் 3 நாட்கள் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள பல பிரபலங்களுக்கு அழைப்பு விடப்பட்ட நிலையில்,  பாலிவுட் பிரபலங்களான ஷாருக் கான், அமிதாப் பச்சன், இந்திய தொழிலதிபர்கள் கவுதம் அதானி,  குமார் மங்கலம் பிர்லா,  உலக தொழிலதிபர்களான மார்க் ஜூக்கர்பர்க், பி ல் கேட்ஸ், கிரிக்கெட் வீரர்கள் டோனி, பிராவோ, சச்சின் ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் உள்ளிட்ட பிரபலங்கள் வந்துள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ரிஹானா இந்த நிகழ்ச்சியில் பாட்டுப் பாட குஜராத்துக்கு வந்திருக்கிறார்.   இன்று மாலை 5 மணியளவில் அவரது இசை நிகழ்ச்சி அரங்கேற உள்ளது.  ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் பாட்டுப்பாட வந்துள்ள ரிஹானாவுக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.