தமிழ்நாட்டில் முதல்முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ்; போக்குவரத்து துறையின் புதிய திட்டம்!

தமிழ்நாட்டில் முதல்முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம் திட்டம் சென்னை போக்குவரத்து காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் சென்னையில் உள்ள முக்கிய மருத்துவமனையுடன் இணைந்து கோல்டன் ஹவர் சவாலை சமாளிக்க…

தமிழ்நாட்டில் முதல்முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம் திட்டம் சென்னை போக்குவரத்து காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் சென்னையில் உள்ள முக்கிய
மருத்துவமனையுடன் இணைந்து கோல்டன் ஹவர் சவாலை சமாளிக்க ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் திட்டம் என்ற புதிய முயற்சியை உருவாக்கி உள்ளனர். கோல்டன் ஹவர் சவாலை எதிர்கொள்ளும் அவசர கால ஆம்புலன்ஸ்களுக்கு கிரீன் கார்டரை செயல்படுத்த தேவையான உள்கட்டமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கிரீன் கார்டு அமைப்பின் செயல்பாடுகள் எம் சைரன் இயக்கமானது தகவல்களை
ட்ரான்ஸ்மீட்டர் மட்டும் ட்ரான்ஸ்மீட்டர் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. ஆம்புலன்சில் இருக்கும் சயரன்களுக்கு ஸ்மார்ட் சைரன் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது ஆம்புலன்ஸ் சைரன் இயக்கப்படும் போதெல்லாம் இது ஒரு தகவலை வெளிப்படுத்துகிறது.

ரிசிவர் போக்குவரத்து சந்திப்புகளில் சைரன் ரிசீவர் என்ற சாதனம் தற்போது
போக்குவரத்து சந்திப்புகளில் உள்ள எல்இடி போர்டுகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து சந்திப்பில் இருந்து 200 மீட்டருக்குள் அவசர கால ஆம்புலன்ஸ்
வரும்போது எல்லாம் சந்திப்பில் உள்ள சைரன் அமைப்பு நிகழ் நேரத்தில் செயல்பட்டு
led போர்டில் ஆம்புலன்ஸ் வரும் திசையை காண்பிப்பதன் மூலம் ஒலிபெருக்கியில்
எச்சரிக்கை செய்வதன் மூலமும் போக்குவரத்து காவலர்களும் மற்றும் வாகன
ஓட்டிகளும் எளிதில் தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட உதவுகிறது இதனால் வாகன ஓட்டிகள் உடனடியாக வெளியிட உதவுகிறது.

இதன் மூலம் ஆம்புலன்ஸ் விரைவாக குறிப்பிட்ட மருத்துவமனையில் செல்லவும் உயிரை
காப்பாற்றும் உதவும் மேலும் மருத்துவ அவசர உறுதி செய்திகளை கடந்தவுடன்
டிஎம்எஸ் போர்டுகள் மற்றும் பொது அறிவிப்பு அமைப்பின் மூலம் சாலை பயனாளிகள்
மருத்துவ அவசர ஊர்திக்கு வழி விட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளான காவேரி மருத்துவமனை, ரேலா மருத்துவமனை மற்றும் குளோபல் மருத்துவமனை யிலிருந்து 25 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 16 போக்குவரத்து சந்திப்புகளில் இச்சேவை இணைக்கப்பட்டுள்ளன சென்னையில் உள்ள 40 சந்திப்புகளுக்கும் இந்த சேவை விரிபடுத்த படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பொது மருத்துவமனை களும் விரைவில் இணைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம் திட்டம் நாட்டிலேயே முதல்முறையாக
சென்னை போக்குவரத்து காவல் துறையால் அறிமுகப்படுத்தியுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.