பொங்கல் பண்டிகையை ஒட்டி போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த #Retro படக்குழு!

பொங்கல் பண்டிகையை ஒட்டி ‘ரெட்ரோ’ படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.  

#Retro film crew releases poster and wishes Pongal!

பொங்கல் பண்டிகையை ஒட்டி ‘ரெட்ரோ’ படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.  

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு ‘ரெட்ரோ’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை 2டி மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இப்படம் ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டுவரும் நிலையில், ரெட்ரோ படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.