தமிழ்நாடு முழுவதும் இன்று ரம்ஜான் கொண்டாடப்படும்; குடும்பம் குடும்பமாக புத்தாடை வாங்கிச் சென்ற மக்கள்!

இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் நள்ளிரவிலும் குடும்பம் குடும்பமாக புத்தாடை மற்றும் பொருட்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.  இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில்…

இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் நள்ளிரவிலும் குடும்பம் குடும்பமாக புத்தாடை
மற்றும் பொருட்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். 

இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது.
ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு
இருப்பர். நோன்பு நாட்கள் முடிந்து ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் சிறப்பாக
கொண்டாடுவர். அந்த வகையில் வெள்ளிக்கிழமை பிறை தென்பட்டதால், ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்டும் என அரசு தலைமை ஹாஜி சாா்பில் வெளியிடப்பட்டது.

இதன் காரணமாக சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பாரதி சாலை பஜாரில்
விடிய விடிய ரம்ஜான் பண்டிகையின் இறுதிக்கட்ட வியாபாரம் நடைப்பெற்றது. ஒவ்வொரு
ஆண்டும் ரமலான் பண்டிகைக்கு களைகட்டும் இந்த பஜார் ஆனது கொரோன
காலகட்டத்திற்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் பல்லாயிரக்கணக்கான மக்களோடு
பரபரப்பாக காணப்பட்டது. இதனால் அப்பகுதி நள்ளிரவை கடந்த போதிலும் பகல் போல்
மக்கள் கூட்டம் அலைமோதிக் காணப்பட்டது.

அப்பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில்
இருந்தும் ஏராளமானோர் வந்து தங்களுக்கு தேவையான காலணிகள், புத்தாடைகள் என
ஏராளமான பொருட்களை மகிழ்ச்சியுடன் குடும்பம் குடும்பமாக வாங்கிச் சென்றனர்.
கடைசி நோன்பு என்பதால் இன்றைய தினத்தில் அதிகப்படியனோர் புத்தடைகளை வாங்க
இங்கு கூடுவார்கள் அதோடு ராமலனுக்கு முந்தைய நாள் என்பதால் எப்போதுமே இந்த
பஜார் இப்படி கலகலப்பாக காணப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.