சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
புரட்டாசி மாதம் தொடங்குவதை முன்னிட்டு சென்ன காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை 2 மணி முதல் மீன் விற்பனையில் மீனவர்கள் ஈடுபட்டனர். வழக்கமான வியாபாரிகள் மற்றம் வாடிக்கையாளர்கள் வராததால் மீன்கள் தேக்கமடைந்தன. பொதுமக்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலையும் சரிந்தது.
ஒரு கிலோ வஞ்சிரம் 600 ரூபாய், வவ்வா 500 ரூபாய், சங்கரா 300 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டன. பெரிய மற்றும் சிறிய ரக மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்ட நிலையில், தேவையான மீன்களை ஒரு சிலரே வாங்கி சென்றனர்







