இணையத்தில் வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் புதிய தோற்றம்!

பிரியங்கா சோப்ராவின் புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரியங்கா சோப்ரா விஜய் நடித்த ’தமிழன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  இந்த படத்தில் அவர் நாயகியாக நடித்தது மட்டுமின்றி விஜய்யுடன் சேர்ந்து…

பிரியங்கா சோப்ராவின் புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரியங்கா சோப்ரா விஜய் நடித்த ’தமிழன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  இந்த படத்தில் அவர் நாயகியாக நடித்தது மட்டுமின்றி விஜய்யுடன் சேர்ந்து ’உள்ளத்தை கிள்ளாதே’ என்ற பாடலையும் பாடினார். இந்த பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.

பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா. இவர் கடந்த 2018ம் ஆண்டு பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்ட நிலையில், அமெரிக்காவில் குடியேறினார். திருமணத்துக்கு பிறகு ஹாலிவுட் படங்களில் சிறந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது இவர் ‘தி ப்ளிஃப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

19ம் நூற்றாண்டில் மெர்சல் என்ற பெண் தனது குடும்பத்தை காப்பாற்ற போராடும் கதைக்களத்தை கொண்டுள்ளது இந்தப் படம். இதில் பிரியங்கா சோப்ரா கடல் கொள்ளையராக நடித்து வருகிறார்.  இதற்காக பிரியங்கா சோப்ரா மோஹக் ஹேர்ஸ்டைலுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.