முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள “வேண்டாம் போதை” விழிப்புணர்வு இயக்கம்- நியூஸ்7 தமிழுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டு

மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள “வேண்டாம் போதை” விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுத்ததற்காக நியூஸ்7 தமிழுக்கு தமது பாராட்டை தெரிவித்துக்கொள்வதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். NEWS7 TAMIL HEALTH யூடியூப் சேனல் தொடக்க விழாவில் அவர் இதனை தெரிவித்தார். 

NEWS7 TAMIL PRIME, NEWS7 TAMIL BAKTHI, NEWS7 TAMIL AGRI என டிஜிட்டல் ஊடகத்துறையில் தனிமுத்திரை பதித்த நியூஸ் 7 தமிழின் மற்றொரு பரிணாமமாக NEWS7 TAMIL HEALTH என்கிற புதிய யூடியூப் சேனல் இன்று உதயமாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற  “NEWS7 TAMIL HEALTH” தொடக்க விழாவில் நியூஸ் 7 தமிழின் மேலாண் இயக்குநர் வை.சுப்பிரமணியன், பிரபல திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இருதய அறுவை சிகிச்சையின் மூத்த நிபுணர் தில்லை வள்ளல், தாம்பரம் சரக காவல்துறை துணை ஆணையர் சீனிவாசன், நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். News7 tamil Health யூடியூப் சேனலை வை.சுப்பிரமணியன், தில்லை வள்ளல் ஆகியோர் தொடங்கிவைத்தனர். ட்ரோன் மூலம் கொண்டு வரப்பட்ட இலச்சினையை இருவரும் அறிமுகம் செய்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய சாய்ராம் கல்வி குழுமத்தின் தலைவர் சாய்பிரகாஷ் லியோ முத்து, நியூஸ்7 தமிழின் தாரக மந்திரமான பொறுப்பும் பொதுநலனும் ஒவ்வொரிடமும் இருந்தால் இந்த நாடு சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய தாம்பரம் சரக துணை ஆணையர் சீனிவாசன், தற்போது கல்லூரிகளில் அதிகரிக்கும் கஞ்சா புழக்கம் மிகவும் வருந்தத்தக்கது என தெரிவித்தார். கொலை குற்றவாளியைக் கூட மன்னித்துவிடலாம், ஆனால் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களை மன்னிக்கவே கூடாது என அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ”வேண்டாம் போதை” விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுத்த நியூஸ் 7 தமிழுக்கு நன்றி என கூறினார். போதையில்லா சமூகத்தை ஏன் உருவாக்க வேண்டும் என்பதை ”விக்ரம்” திரைப்படத்தின் மூலம் அழுத்தமாக தாம் கூறிவிட்டதாகக் கூறிய லோகேஷ் கனகராஜ், இதற்குப் பிறகு மக்களுடைய பொறுப்பு என்றார். போதையில்லா சமூகம் உருவாக்க மக்கள் உறுதியேற்க வேண்டும் என்றும், போதைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க நாம் முயற்சிக்க வேண்டும் எனறும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமது உரையில் தெரிவித்தார்.

விஜய் நடிப்பில் தான் அடுத்து இயக்க உள்ள ‘தளபதி 67’ படத்தின் அப்டேட் சற்று தாமதாகத்தான் வரும் எனக் கூறிய லோகோஷ் கனகராஜ், பெண்களை மையப்படுத்தி தான் கதை எழுதுவதில்லை என்கிற விமர்சனங்களுக்கும் பதில் அளித்தார். பெண்களை மையப்படுத்தி விக்ரம் படத்தில் ஏஜண்ட் டீனா” கதாபாத்திரத்தை அமைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்: கே.பாலகிருஷ்ணன்

Jayapriya

சிங்காரச் சென்னை 2.0: முதலமைச்சர் ஆய்வுக் கூட்டத்தில் விவாதம்

Vandhana

பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி படிப்புகள் செல்லாது: யூஜிசி

Arivazhagan Chinnasamy