தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மருத்துவமனை அருகில் அமைக்கப்பட்டுள்ள, டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பென்னாகரம் போலீசார் உடனடியாக சிலைக்கு வெள்ளை வேட்டியை சுற்றி சிலையை மறைத்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தீ வைப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்த பகுதியில் சமூக ஆர்வலர்களும், அரசியல் பிரமுகர்களும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் இந்தப் பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியுள்ளது.







