சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு பதிவு, அதில் சிக்கன் பிரியாணியை திணித்து ஒருவர் சமோசா தயாரிப்பதைக் காட்டுகிறது.
சமோசாவிற்குள் எதை வேண்டுமானாலும் நிரப்பி சாப்பிட்டலாம். குறிப்பாக காய்கறிகள், பருப்பு, போஹா, சீஸ், கீமா, சிக்கன் என அனைத்து வகயான சமோசாக்களும் சுவையாக இருக்கும். இந்த வகைகளை நாம் அறியாதவர்கள் அல்ல.
ஆனால், பிரியாணியை சமோசாவுக்குள் அடைப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு பதிவு, அதில் சிக்கன் பிரியாணியை திணித்து ஒருவர் சமோசா தயாரிப்பதைக் காட்டுகிறது.
https://twitter.com/khansaamaa/status/1639997525359988736?s=20
@khansaamaa என்ற பயனரால் ட்விட்டரில் வெளியிடப்பட்ட படங்கள், சமோசா மாவில் பிரியாணி அடைக்கப்பட்டு வறுக்கப்பட்டதை வெளிப்படுத்தியது. இந்த பிரியாணி சமோசாவில் பேஸ்ட்ரி அரிசி மற்றும் கோழி துண்டுகளால் நிரப்பப்பட்டுள்ளது.
இந்த பதிவு 186,000 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் ஏராளமான கமெண்ட்களைக் கொண்டுள்ளது. சிலர் இந்த உணவை முற்றிலும் நிராகரித்தனர். இது திகிலூட்டும் வகையில் இருப்பதாக எழுதினர். சிலர் சிற்றுண்டியுடன் விளையாடுவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.







