மீண்டும் மக்களவையில் ராகுல் காந்தி…நாடாளுமன்ற வளாகத்தில் உற்சாக வரவேற்பு அளித்த எம்பிக்கள்!

தகுதி நீக்கம் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து ராகுல் காந்தி எம்.பி இன்று மீண்டும் நாடாளுமன்றம் வந்தார். 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி பதவி, தீர்ப்பு வந்த…

தகுதி நீக்கம் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து ராகுல் காந்தி எம்.பி இன்று மீண்டும் நாடாளுமன்றம் வந்தார்.

2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி பதவி, தீர்ப்பு வந்த மறுநாளே பறிக்கப்பட்டது. ராகுல் காந்தி, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அதில், அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், அதைத்தொடர்ந்து நிகழ்ந்த அவரது தகுதி நீக்கமும் அவருக்கு மட்டுமின்றி, அவரை தேர்வு செய்த வாக்காளர்களின் உரிமையையும் பாதிக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆனால், அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கீகரிக்கப்படவில்லை. இது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் இன்று திரும்பப் பெற்றது.

இந்நிலையில், தனது டிவிட்டர் BIO-ல் ‘Dis’Qualified MP என்பதை Member of Parliament என மாற்றியதோடு, தற்போது நாடாளுமன்றம் சென்றார் ராகுல் காந்தி. அவருக்குக் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

மக்களவை சென்ற ராகுல்காந்தி தனது இருக்கையில் அமர்ந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.