முக்கியச் செய்திகள் சினிமா

மார்வெல் படங்களுக்கு மவுசு குறைகிறதா?

தொடர் சறுக்கலைச் சந்திக்கும் மார்வெல் படங்களுக்கு பெரிய நட்சத்திரங்கள் வெளியேறியது மட்டுமே காரணம் இல்லை. மோசமான அணுகுமுறையை மார்வெல் நிறுவனம் கொண்டுள்ளது.

உலகம் முழுமைக்கும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவை மார்வல் திரைப்படங்கள். 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படங்களானது, காமிக்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட்டு வருகின்றன. மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தையும், பெரும் வசூலையும் வாரி குவிக்கும் மார்வெல் திரைப்படங்கள் சமீப காலமாக சறுக்கலைச் சந்தித்து வருகின்றன. மிக பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா போன்ற கதாபாத்திரங்கள் அவென்ஜர்ஸ் எண்ட் கேம் படத்திலிருந்து மார்வல் யூனிவர்ஸிலிருந்து விலகினர். இதுவே மார்வெல்லின் சறுக்கலுக்கு காரணமாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய பிரச்சனை வெளிவந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மார்வெல் திரைப்படங்கள் பெரும்பாலும், vfx என்று அழைக்கப்படும் கிராபிக்ஸ் காட்சிகளால் உருவாக்கப்படுபவை. ஆனால், மார்வெல் நிறுவனத்தின் கிராபிக்ஸ் துறையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மார்வெல் நிறுவனம் வேலை செய்ய தகுதியற்ற இடமாக மாறியிருப்பதாக அதில் பணியாற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர்.

மார்வெல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய மற்றும் தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் பணியாளர்கள் பேசுகையில், முடிக்க முடியாத காலக்கெடுக்களை மார்வெல் நிறுவனம் அளிப்பதாகத் தெரிவிக்கின்றனர். மார்வெல் நிறுவனம் மோசமான அணுகுமுறையுடனும், உரிய திட்டமிடல் இன்றியும் இயங்குவதாகத் தெரிவிக்கும் அவர்கள், மார்வெல் நிறுவனம் ஒரு நரகம், இங்கு யாரும் வேலை செய்ய வேண்டாம் என்றும் தெரிவிக்கின்றனர். தற்போது தரம் குறைவான மார்வெல் படங்கள் வெளியாவதற்கும் இதுவே காரணமாகக் கூறப்படுகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram