மதுரை ரயில் தீ விபத்து: கைதான 5 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்…

மதுரை ரயில் பெட்டி தீ விபத்து வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு, 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் கடந்த 26-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் வந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட…

மதுரை ரயில் பெட்டி தீ விபத்து வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு, 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கடந்த 26-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் வந்த ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் வழிகாட்டி நரேந்திர குமார், சமையல் பணியாளர்கள் சத்பிரகாஷ் ரஸ்தோஜி, ஹார்திக் சஹானி, உதவியாளர் சுபம் கஸ்யம், ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட உதவியாளர் தீபக் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை செப்டம்பர் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சந்தனகுமார் உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.