குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.   சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம்…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த சில மாதங்களில் வரலாறு காணாத அளவிற்கு தங்கம் விலை உயர்ந்தது.  கடந்த மாதத்தில் உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.54,560க்கு விற்பனையான நிலையில்,  இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ரூ.54,400க்கு விற்பனையாகிறது.  நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.6820க்கு விற்பனையான நிலையில்,  இன்று கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.99.30க்கு விற்பனையான நிலையில்,  இன்று கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.99.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.