விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்.19ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் முதல் வாரத்தில் மட்டும் ரூ.461 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.







