கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

விடுமுறை தினமான இன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களில் ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி…

விடுமுறை தினமான இன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களில் ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வருகை தருகின்றனர்.

வார விடுமுறைதினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலை முதலே கொடைக்கானலுக்கு வரத் தொடங்கினர்.

அவ்வாறு ஏராளமான சுற்றுலா வாகனங்கள் கொடைக்கானலுக்கு படையெடுத்ததால் நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

குறிப்பாக, கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மோயர் பாயிண்ட், குணா குகை, உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. எனினும், சுற்றுலா இடங்களுக்கு சென்ற அவர்கள் குதிரை சவாரி செய்தும், படகு சவாரி செய்தும் விடுமுறை தினத்தை கொண்டாடினர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.