#Kanguva இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு!

கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 26ஆம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. இப்படத்தில் பாபி…

கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 26ஆம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. இப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிததுள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்க, இப்படத்திற்கு தேவிஸ்ரீபிராசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஸ் உள்ளிட்ட மொழிகளில் நவம்பர் 14ந் தேதி வெளியாக உள்ளது.

இப்படம் கடந்த அக்டாபர் 10ம் தேதி வெளியாக இருந்த நிலையில், ரஜினியின் வேட்டையன் படத்தால் தள்ளிப்போனது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சாய்ராம் கல்லூரியில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 26ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.