32.7 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் உலகம் சினிமா

ஜான் விக் 4 பிரமாண்ட வெற்றி; ஸ்டண்ட் குழுவினருக்கு ரோலக்ஸ் கடிகாரங்களை பரிசளித்த கீனு ரீவ்ஸ்

கீனு ரீவ்ஸ் தனது ஜான் விக்: அத்தியாயம் 4 இன் ஸ்டண்ட் குழுவினருக்கு  ஆடம்பரமான ரோலக்ஸ் கடிகாரங்களை பரிசளித்துள்ளார். 

மிகப்பெரிய வெற்றிகரமான முதல் மூன்று பாகங்களைத் தொடர்ந்து 4 வது பாகம் கடந்த வாரம் வெளியானது. கீயானு ரீவ்ஸ் எப்போதும் போலவே இந்த படத்திலும் தந்து அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டியுள்ளார். ராட்டன் டொமாட்டோஸில் அதன் தற்போதைய விமர்சகர்களின் மதிப்பெண் 95 சதவீதமாக உள்ளது. இது முந்தைய ஜான் விக் படங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களை விட சிறந்த தரவரிசையாகும். முந்தைய மூன்று படங்களின் மதிப்பெண்களும் 80 சதவீத வரம்பிலிருந்தன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சாட் ஸ்டாஹெல்ஸ்கி இயக்கிய இந்தப் படம், வழக்கமான கலவரம், வன்முறை, இயற்பியல் மற்றும் ஆக்‌ஷன் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இறந்த டோனி யென், பில் ஸ்கார்ஸ்கார்ட், லாரன்ஸ் ஃபிஷ்பர்ன், ஹிரோயுகி சனாடா, ஷமியர் ஆண்டர்சன், ரினா சவாயாமா, இயன் மெக்ஷேன் மற்றும் மறைந்த லான்ஸ் ரெட்டிக் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தைப் பாசில் இவானிக், எரிகா லீ மற்றும் ஸ்டாஹெல்ஸ்கி ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில்,  படத்தில் பணிபுரிந்த ஸ்டண்ட்மேன்களுக்கு விலையுயர்ந்த ரோலக்ஸ் கடிகாரங்களை  பரிசளித்து அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading