30.9 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

சென்னையில் ஜவான் இசை வெளியீட்டு விழா; லேட்டஸ்ட் அப்டேட்!

சென்னையில் உள்ள தனியார் கல்லூர் ஒன்றில் ஜவான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் செப்.7-ம் தேதி வெளியாகிறது. இப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குநர் அட்லியுடன் இணைந்து ஏற்கனவே ஷாருக்கான் பார்த்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அனிருத் இசையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 30) சென்னையில் உள்ள தனியார் கல்லூர் ஒன்றில் ஜவான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து, செப்டம்பர் முதல் வாரத்தில் துபையில் படத்தின் விளம்பரப் பணிகளை மேற்கொள்ள படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading