ஐபிஎல் 2024 | மழை காரணமாக போட்டி ரத்து..!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டி டாஸ் போடப்பட்ட பின் பெய்த மழையால் கைவிடப்பட்டது. மார்ச் மாதம் 22ம் தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17வது சீசன், அதன் இறுதிக்…

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டி டாஸ் போடப்பட்ட பின் பெய்த மழையால் கைவிடப்பட்டது.

மார்ச் மாதம் 22ம் தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17வது சீசன், அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.  லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன.  தொடர்ந்து, மே 22-ம் தேதி முதல் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில், கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாட இருந்தன.  இந்த போட்டி கவுகாத்தியில் நடைபெற்ற நிலையில், அங்கு மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனையடுத்து சிறிதுநேரம் மழை நின்றதால் போட்டி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.  அதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  மழை காரணமாக போட்டி 7 ஓவர்களாக குறைக்கப்பட்டது.  ஆனால் மீண்டும் மழை பெய்யத் தொடங்கிய போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் அளிக்கப்பட்டன.  அதன்படி கொல்கத்தா அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ராஜஸ்தான் அணி அணி 17 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது.  பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா அணி- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியையும், ராஜஸ்தான் அணி- பெங்களூரு அணியையும் எதிர்த்து விளையாட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.