ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இதயம் முரளி’. அதர்வா தந்தையின் பட்டப் பெயரான ‘இதயம் முரளி’ என்ற படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியானது. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கயாது லோஹர், பிரீத்தி முகுந்தன், ஏஞ்சலின், பிரக்யா நக்ரா என பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். அவரது இசையில் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பல்வேறு மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து வரும் அதர்வா ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்திற்குப் பிறகு தற்போது புதுமுக இயக்குநருடன் இணைந்ததாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தணல் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்க, அன்னை ஃபிலிம் புரொடக்ஷன், எம். ஜான் பீட்டர் தயாரிக்கிறார்.







