“இங்க பேயும் நெசம்.. சாவும் நெசம்” – வெளியானது ‘கிங்ஸ்டன்’ படத்தின் டீசர்!

ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள ‘கிங்ஸ்டன்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜி. வி.பிரகாஷ் குமாரின் 25 ஆவது படமாக ‘கிங்ஸ்டன்’ உருவாகி வருகிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல்…

ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள ‘கிங்ஸ்டன்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜி. வி.பிரகாஷ் குமாரின் 25 ஆவது படமாக ‘கிங்ஸ்டன்’ உருவாகி வருகிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல் பிரகாஷ் இயக்கி வருகிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் திவ்யபாரதி நடிப்பில் வெளியான ‘பேச்சிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, இந்த படத்தில் திவ்யபாரதி நாயகியாக நடிக்கிறார்.
மேலும் இப்படத்தில் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, ‘கல்லூரி’ வினோத், சேத்தன், குமரவேல் மற்றும் மலையாள நடிகர் சபுமோன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் தொடங்கி வைத்தார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் மீனவர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் First Look போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதன் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.  மேலும் இந்த திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் மார்ச் 7ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.