தங்கம் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ரூ.53,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கடந்த சில மாதங்களாக உலகளவில் தங்கத்தின் மீது குவிந்து வரும் அதிகப்படியான முதலீடுகளால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து ரூ.53,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த சில மாதங்களாக உலகளவில் தங்கத்தின் மீது குவிந்து வரும் அதிகப்படியான முதலீடுகளால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரலாறு காணாத இந்த விலையேற்றம் நடுத்தர மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் நேற்று விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இந்நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ..65 உயர்ந்து ரூ.6,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.53,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி நேற்று கிராமுக்கு ரூ.96க்கும், ஒரு கிலோ ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் 50 காசுகள் உயர்ந்து, ரூ.97.50க்கும் ஒரு கிலோ ரூ.1,500 உயர்ந்து ரூ.97,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.