மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நேற்று துரை வைகோ எம்பி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று ராஜினாமா முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். இன்று சென்னையில் நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிர்வாக குழுக் கூட்டத்தில் துரை வைகோ சமாதானப்படுத்தப்பட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. நிர்வாகிகள் வலியுறுத்தலையடுத்து தன்னுடைய ராஜினாமாவை துரை வைகோ திரும்பப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மல்லை சத்யா, துரை வைகோ இருவரும் இதுவரை இருந்த மனக்கசப்புகளை மறந்துவிட்டு இணைந்து பணியாற்ற பொதுச் செயலாளர் வைகோ அறிவுறுத்தியதன் பேரில் இந்த முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.







