‘லால் சலாம்’ திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

‘லால் சலாம்’ திரைப்படத்தின் இரண்டாம் நாளில் ரூ.3 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.    நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வெளியான மூன்றாவது படம் லால் சலாம். இந்தப் படத்தில் ‘மொய்தீன்…

‘லால் சலாம்’ திரைப்படத்தின் இரண்டாம் நாளில் ரூ.3 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வெளியான மூன்றாவது படம் லால் சலாம். இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்து உள்ளார். லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு விளையாட்டுப் படம் என சொல்லப்படுகிறது.

இத்திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்னும் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்க, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, விவேக் பிரசன்னா மற்றும் தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் முதல் நாளில் ரூ.3.55 கோடி வசூல் செய்தது. இந்த நிலையில் 2-வது நாளில் ரூ.3 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.