டிச.17-ல் சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு!

சேலத்தில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு டிசம்பர் 17ம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திமுக இளைஞரணி முதல் மாநில மாநாடு கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்றது.…

சேலத்தில் திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு டிசம்பர் 17ம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திமுக இளைஞரணி முதல் மாநில மாநாடு கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்றது. சுமார் 16 வருடங்களுக்குப் பிறகு 2வது மாநில மாநாடு நடைபெற உள்ளது.

இந்நிலையில் இளைஞரணி மாநாடு சேலத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது தேதியை திமுக தலைமை இன்று (ஆகஸ்ட் 26) அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், “2007 ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று கழக வரலாற்றில் முத்திரைப் பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞரணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து, வரும் டிசம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.