ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் போட்டி? செல்வப்பெருந்தகை தகவல்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்புவதாக அக்கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளது. 

Congress contest in Erode East? Wealth of information!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்புவதாக அக்கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலை காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்.5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்படவுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து ஈரோட்டில் தேர்தல் நடைத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

By-election announcement for Erode East constituency on February 5!

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக அளித்த பேட்டியில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட விருப்பம். காங். தேசிய தலைவர்களுடன் பேசி விரைவில் வேட்பாளர் முடிவு செய்யப்படும்” என்றார்.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு ஒதுக்கப்படுகிறது என்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இதுவரை அறிவிக்காதது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.