தந்தை பெரியாரின் 50வது நினைவு தினத்தை ஒட்டி அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகள் களைதல் மற்றும் பெண் விடுதலைக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார். இவர் தன்னுடைய 94வது வயதில் 1973ம் ஆண்டு டிச.24ம் தேதி காலமானார். பெரியாரின் 50வது நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி. மற்றும் பிரமுகர்கள் மரியாதை செலுத்தினர்.







