#ChennaiCityGangsters – ஜான் விஜய் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு!

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் ஜான் விஜய் கதாபாத்திரத்திற்கான புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. வைபவ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண்…

#ChennaiCityGangsters - John Vijay character debut poster release!

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் ஜான் விஜய் கதாபாத்திரத்திற்கான புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

வைபவ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. தற்போது படக்குழு படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களில் அறிமுக போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஜான் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் டமார் லால் என்ற கதாபாத்திரத்தில் ஜான் விஜய் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை எனவும் படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.