காவிரி விவகாரம் – மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது சட்டப்பேரவை தீர்மானம்!

காவிரி நதிநீர் விவகாரத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை முறைப்படி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் கடந்த 9-ம்…

காவிரி நதிநீர் விவகாரத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை முறைப்படி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் கடந்த 9-ம் தேதி தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து நிறைவேற்றிய அந்த தீர்மானத்தில் தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பால் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை இப்பேரவை ஒரு மனதாக வலியுறுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த தீர்மானம் நிறைவேறிய அன்றைய தினமே சட்டசபை செயலகத்தில் இருந்து தலைமைச் செயலாளருக்கு தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு தீர்மானத்தின் நகலை முறைப்படி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.