அண்ணன் திருமணம் ; அமெரிக்காவில் #Samantha – படங்கள் இணையத்தில் வைரல்!

தனது அண்ணன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள சமந்தாவின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும்…

brother's marriage; #Samantha in America - Pictures Go Viral on the Internet!

தனது அண்ணன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள சமந்தாவின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் எனும் தசை அழற்சி பாதிப்பில் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவம் மற்றும் சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருகிறார். சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்து தன் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திவரும் சமந்தா, தனது யூடியூப் சேனலில் உடல் மற்றும் மன நலன் குறித்த பாட்காஸ்ட் வீடியோக்களை கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தார்.

மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகளுக்குச் சென்றதால் ஒரு ஆண்டுக்கு மேலாக  சினிமாவிலிருந்து விலகி இருந்தார்.  இதையடுத்து, ஆயுர்வேதா சிகிச்சை எடுத்து வந்தார். சிகிச்சைக்கு பின் ஓரளவுக்கு உடல்நிலை தேறிய சமந்தா கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி 37 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். சமந்தாவிற்கு வாழ்த்தை தெரிவித்து அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டது. ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் தயாரிப்பில் “மா இண்டி பங்காரம்” என்ற திரைப்படத்தில் சமந்தா நடிக்கவுள்ளாதாக படக்குழு அறிவித்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகை சமந்தாவின் அண்ணன் டேவிட்டின் திருமணம் அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ளது. அண்ணனின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திருமண நிகழ்வில் சமந்தா தனது பெற்றோர் மற்றும் அண்ணனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து சமந்தாவின் அண்ணனுக்கு நெட்டிசன்கள் திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.