ஆசிய கோப்பை கிரிக்கெட் – இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு!

இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில்,  பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.  ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர்-4′ சுற்று போட்டிகள்…

இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில்,  பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர்-4′ சுற்று போட்டிகள் இலங்கையில் நடக்கின்றன. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று (செப்.,10) நடக்கும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் ‛டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம், பேட்டிங் தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், ஷுப்மன் கில்லும் களம் இறங்கியுள்ளனர். நண்பகல் 3.30 மணி நிலவரப்படி 6 ஓவர்கள் முடிவில் 37 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ரோகித் ஷர்மா ஒரு சிக்சரும் ஒரு பவுண்டரியும் விளாசியுள்ளார். ஷப்மன் கில்லும் தனது பங்கிற்கு 6 பவுண்டரிகள் விளாசி விளையாடி வருகிறார்.

இந்திய அணியில் பும்ரா, லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளனர். விளையாடும் லெவன் அணியில், ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், போட்டியின் போது இன்று மழை குறுக்கிடும் என அஞ்சப்படுகிறது. அப்படி மழை பெய்யுமாயின் மாற்று நாளில் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆயினும் இன்று எந்த குறுக்கீடும் இன்றி போட்டி முழுமையாக நடைபெற வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.