“தமிழ் எழுத்தாளர்கள் ‘நோபல்’ பரிசை இலக்காக கொள்ள வேண்டும்” – முதலமைச்சர் #MKStalin பதிவு

தமிழ் எழுத்தாளர்கள் ‘நோபல்’ பரிசை இலக்காக கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பன்னாட்டு புத்தக திருவிழா நேற்று முன்தினம் (ஜன.16) தொடங்கியது. இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த பன்னாட்டு புத்தக திருவிழா இன்றுடன் நிறைவடைந்தது.

இதையும் படியுங்கள் : #Kolkata மருத்துவர் கொலை வழக்கு – சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!

இதில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் புதுப்பித்த 75 நூல்களை வெளியிட்டார். இந்த நிலையில், பன்னாட்டு புத்தகத் திருவிழா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிபெயர்ப்பு தொடர்பாக 1,125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. சர்வதேச புத்தகக் காட்சியின் மூலம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை புதிய சாதனை படைத்துள்ளது. திமுக அரசு அளித்த மானியம் மற்றும் ஆதரவின் மூலம் தமிழ் இலக்கியங்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறுகின்றன. தமிழ் எழுத்தாளர்கள் ‘ஞானபீட’ விருது மட்டுமின்றி, ‘நோபல்’ பரிசு வெல்வதையும் இலக்காகக் கொள்ள வேண்டும்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.