“இந்தியா கூட்டணி கட்சிகளுக்கிடையே சுமூக உடன்பாடு எட்டப்படும்” – டி.ராஜா பிரத்யேக பேட்டி!

இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே உடன்பாடுகள் சுமூகமாக ஏற்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் வசந்தி,  நடத்திய கலந்துரையாடலில்…

இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே உடன்பாடுகள் சுமூகமாக ஏற்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் வசந்தி,  நடத்திய கலந்துரையாடலில் அவர் கூறியதாவது:

இந்திய கூட்டணி கட்சிகளுக்கு இடையே உடன்பாடுகள் சமூகமாக ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு சூழல் ஏற்பட்டு இருக்கிறது.  அதை எல்லாம் கணக்கில் வைத்துக் கொண்டு இந்திய கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இந்த தேர்தல் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.  பாரதிய ஜனதா கட்சி பத்து ஆண்டுகள் ஆட்சியில் இந்திய அரசியலமைப்பு பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

இன்றைக்கு நாடு காப்பாற்றப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் காப்பாற்றப்பட வேண்டும்.  ஜனநாயகம் காப்பற்றப்பட வேண்டும் என்பது ஒரு முதன்மை பிரச்சினையாக முன் வந்திருக்கிறது.  இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு அரசியல் கட்சிகள் ஓர் அணியாக திரண்டு இருக்கிறோம்.

மோடி கூறுவது அபத்தமான அநாகரிகமான ஒரு குற்றச்சாட்டு.  குடும்ப அரசியல் என்பதை மோடி விளக்க வேண்டும்.  அரசியல் கட்சிகள் பங்கு பெறக்கூடிய பாராளுமன்ற ஜனநாயகம் தான் நம்மளுடைய ஜனநாயகம்.  பிரதமரிடம் வேறு கொள்கை இல்லை அதனால் தான் குடும்ப அரசியல் என்ற வார்த்தையை சொல்லி வருகிறார்.

கருப்பு பணம் வெளியே கொண்டு வரப்படும்.  ஒவ்வொரு கணக்கிலும் பணம் அளிக்கப்படும் என மோடி கடந்த முறை கேரண்டி அளித்தார்.  அது என்ன ஆயிற்று?மோடிக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டிருக்கிறது.  பாரதிய ஜனதா கட்சிக்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது.  அதனால் தான் அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் வைத்து எதிர்க்கட்சியினை மிரட்டி வருகின்றனர்.

இந்திய கூட்டணி கொள்கைரீதியாக மக்களை வென்றெடுத்து மக்களை நம்பிக்கை பெறும் என்ற பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

அமித்ஷா இன்று,  தான் என்ன பேசுகிறோம் என்பதை அறியாமலே ஏதேதோ பேசிக் கொண்டு வருகிறார்.  வலதுசாரி அதிதீவிரவாதம் என்று இருப்பதை அவர் ஒப்புக் கொள்கிறாரா? வலதுசாரி தீவிரவாதத்தை ஊக்குவிப்பது ஆர்.எஸ்.எஸ் தான் அந்த ஆர்எஸ்எஸ் சொல்வதை தான் பாஜக செய்து வருகிறது.

இந்திய நாடு என்பதை மறு இலக்கணம் படுத்த வேண்டும் என ஆர் எஸ் எஸ் கூறி வருகிறது. இந்தியாவை இந்துக்கள் நாடாக மாற்றுவதில் பாஜக முயன்று வருகிறது.  இடதுசாரி அதி தீவிரவாதம் ஒழிக்க வேண்டும் என அமித்ஷா பேசப்படுவது அவர் எந்த அளவுக்கு புரிந்து கொள்கிறாய் என்பது விளக்க வேண்டும்.  இடதுசாரி இயக்கங்கள்,  இவர்கள் ஆட்சியை எதிர்த்து போராடுகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவுடன்,  நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் வசந்தி நடத்திய கலந்துரையாடலை முழுமையாக காண….  

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.